குறைப்பிரசவம் ஒரு குறையில்லை. வழிகாட்டும் மருத்துவம்! WorldPrematurityDay

முழு வளர்ச்சி அடையும் முன்னரே பாதுகாப்பான கருவறையில் இருந்து வெளியே வருவதால் குறை மாத குழந்தைகளுக்கு சீதோஷண மாற்றம் தான் முதல் பிரச்னை.

Published: 17 Nov 2020 5 PM Updated: 17 Nov 2020 5 PM

குறைப்பிரசவம்

குறைப்பிரசவம் 0 Comments

லகில் தற்போது குழந்தைப்பேறு என்பதே மிகப்பெரிய விஷயமாகிவிட்டது. திரும்பிய இடமெல்லாம் செயற்கை கருத்தரித்தல் பற்றிய செய்திகள். இதற்கான மிக முக்கிய காரணம் நம் மரபணு அளவில் மாறிப்போன அல்லது நாம் மாற்றிவிட்ட உணவுமுறைப் பழக்கங்களும் வாழ்வியல் மாற்றங்களும்தாம்.

கருத்தரிக்கும் தாய்மார்களுக்கு இருக்கும் பலவிதமான குறைபாடுகள் காரணமாக அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு உபாதைகள் கருவறைக்குள்ளேயே ஆரம்பித்துவிடுகின்றன.

அதில் மிக முக்கியமான ஒன்று குறைப்பிரசவம்!

மருத்துவர் சஃபி சுலைமான்

பண்டைய காலத்தில் நம் முன்னோர்களுக்கு பத்து குழந்தைகள் பிறந்தால் அதில் ஒன்றுகூட குறைப்பிரசவமாக இருக்காது. அப்படியே குறைமாதத்தில் பிறந்தால் அந்தக் குழந்தை பெரும்பாலும் இறந்துபோகும்.

நம் குடும்பங்களில் தாத்தா, பாட்டி காலத்தில் இப்படியான ஒரு நிகழ்வு நிச்சயமாக நடந்திருக்கும். குறைமாதத்தில் பிறந்த குழந்தை பிழைத்திருந்தாலும் சரியான பராமரிப்பு அளிக்காத காரணத்தால், மூளைவளர்ச்சி குன்றியோ ஊனமாகவோ இருந்திருக்கும்.

ஆனால், அந்த நிலை தற்போது முற்றிலும் மாறிப்போனது. காரணம், அதிவேக முன்னேற்றம் அடைந்திட்ட சிசு நல மருத்துவம்தான்.

உண்மையைச் சொல்லபோனால், தற்போது பிறக்கும் குழந்தைகளில் 10 சதவிகிதம் குறைப்பிரசவம். ஆனால் 10 சதவிகித குறைப் பிரசவக் குழந்தைகளில் 9 சதவிகிதம் குழந்தைகளைக் காப்பாற்றிவிட முடியும்.

உலக குறைமாத குழந்தைகள் விழிப்புணர்வு தினம்!

உலக சுகாதார நிறுவனத்தின் சார்பில் 2008- ம் வருடம் முதல் ஒவோர் ஆண்டும் நவம்பர் மாதம் 17-ம் தேதி குறைமாத குழந்தைகள் விழிப்புணர்வு நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்த வருடம் இந்நாளின் கருப்பொருள் - Together for babies born too soon – Caring for the future

குறைமாத குழந்தைகள் பற்றியும் அவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகள், அவற்றுக்கான மருத்துவங்கள் பற்றியும் பார்ப்போம்.

newborn baby

1. குறை மாதக் குழந்தை என்றால் என்ன ?

கர்ப்ப காலத்தில் 37 வாரங்கள் முழுமையடையாமல், சில காரணங்களால் அதற்கு முன்னரே பிறந்துவிடும் குழந்தைகளைத் தான் குறை மாதக் ( Preterm Babies) குழந்தைகள் என்கிறோம்.

2. குறைப் பிரசவத்துக்கான காரணங்கள் என்ன?

* கருவில் ஒரு குழந்தைக்கும் மேல் உருவாகுதல் ( Twin or Triplet gestation).

* கர்ப்பிணிக்கு கர்ப்பகால ரத்த சோகை ( Gestational_anemia ) , கர்ப்பகால சர்க்கரைநோய் (GDM), உயர் ரத்த அழுத்தம் பாதிப்பு ஏற்படும்போது.

* கர்ப்ப காலத்தில் அடிக்கடி தொற்று நோய் ( Gestational infections and infestations ) பாதிப்பு அல்லது ஏதேனும் ஒரு தொற்றை குணமாக்காது விடுதல் ( சருமநோய் முதல் சொத்தைப் பல் வரை).

* கர்ப்பப்பை வாய்ப் பகுதியில் பிரச்னைகள்.

Also Read

``லாக்டௌனில் தொடர்ந்து கருத்தடை மாத்திரைகள். பெண்களின் கவனத்துக்கு!'' - மகப்பேறு மருத்துவர்

``லாக்டௌனில் தொடர்ந்து கருத்தடை மாத்திரைகள். பெண்களின் கவனத்துக்கு!'' - மகப்பேறு மருத்துவர்

* குறிப்பிட்ட காலத்துக்கு முன்னரே திடீரென பனிக்குடம் உடைதல்.

* கர்ப்ப காலத்தில் உதிரப்போக்கு.

* புகைபிடித்தல், புகை பிடிக்கும் கணவர்கள் அல்லது ஆண்கள் உள்ள இல்லங்களில் வசிப்பதால்.

* அவசியமற்ற, மருத்துவர் பரிந்துரைக்காத மருந்துகளை உட்கொள்ளுதல் மற்றும் பரிந்துரையில்லாத உடற்பயிற்சிகள், நடனங்கள்.

* மருத்துவரால் பரிந்துரைக்கப்படும் நேரத்தில் கர்ப்பப்பை வாய்ப் பகுதியில் சிகிச்சைகள் செய்யத் தவறுதல்.

* கர்ப்ப காலத்தில் சிகிச்சை மற்றும் மருத்துவர் ஆலோசனைகளை அலட்சியப்படுத்திப் புறக்கணித்தல்.

baby

3. குறைமாதத்தில் பிறந்தாலும் குழந்தை பாதுகாப்பாக இருக்க என்ன செய்யவேண்டும்?

பேறுகால மருத்துவம் பார்க்கும் மருத்துவமனையிலிருக்கும் வசதிகள் பற்றி அறிந்து வைத்திருக்க வேண்டும். மகப்பேறு மருத்துவர்கள் எந்நேரமும் பணியில் இருத்தல் வேண்டும். பச்சிளங்குழந்தை மருத்துவர்கள் பணியில் இருக்கும் மருத்துவமனையை நாடவேண்டும்.

தரமான சிசு உயிர்காக்கும் உபகரணங்கள்கொண்ட NICU எனும் பச்சிளங்குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவு இருக்கும் மருத்துவமனையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். கைதேர்ந்த பச்சிளங்குழந்தை பராமரிப்பு செவிலியர்களும் இருக்க வேண்டும்.

குழந்தைக்கு உயர் சிகிச்சை தேவைப்பட்டால் வேறு மருத்துவமனைக்கு உடனடியாக மாற்றக்கூடிய வசதிகள் இருக்க வேண்டும். இவையனைத்தும் இருக்கும் பட்சத்தில் குறைமாத குழந்தைப்பேறாக இருந்தாலும் எளிதாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்கும்.

4.குறைமாத குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்னைகள் என்னென்ன ?

குறைமாத குழந்தைகள் முழு வளர்ச்சி அடையும் முன்னரே பாதுகாப்பான கருவறையிலிருந்து வெளியே வருவதால், அவர்களுக்கு சீதோஷண மாற்ற உபாதைகள்தான் முதல் பிரச்னை.

அடுத்ததாக, பிறக்கும் 80 சதவிகிதம் குழந்தைகளுக்கு நுரையீரல் வளர்ச்சியின்மை, இதய கோளாறுகள், மூளை சம்பந்தப்பட்ட பிரச்னைகள், வயிறு மற்றும் குடல் சம்பந்தப்பட்ட தொந்தரவுகள், குறைவான உடல் எடை, உயரம் குறைதல், தலையின் சுற்றளவு குறைவாக இருத்தல் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். எளிதாகப் பரவும் கொடுமையான தொற்றுகளும் பாதிக்கலாம்.

happy pregnancy

5. குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

குறை மாதத்தில் பிறந்த குழந்தைகளை பச்சிளங்குழந்தை மருத்துவர் இசையும் நேரத்தில்தான் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்து அழைத்துச் செல்லவேண்டும்.

இதுபோன்று பிறக்கும் குழந்தைகள் Highrisk newborns என பெயரிடப்படுவர். அவர்களுக்கு உடல்நலக் குறைவு எப்போது ஏற்பட்டாலும் நேரம் தாழ்த்தாமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.